வலையொலி [Podcasts] - வானொலியின் மறுகண்டுபிடிப்பு
ஒலி விவரிப்புகளின்[narratives] புதிய வடிவங்களை உருவாக்குவதன் மூலம், வலையொலி வானொலியின் தொகுப்புகளுக்கு புதிய உயிர் கொடுத்துள்ளது. ஒரு சில ஆண்டுகளில், வலையொலி உலகளாவிய தொழிலாக உருவெடுத்தள்ளது. இது கேட்போருடன் நெருக்கமான இணைப்புகளை உருவாக்க அனுமதிக்கிறது.
வேறு எந்த தகவல் தொடர்பு வழிகளையும் விட, கேட்பவருடன் நெருக்கமான சூழ்நிலையை உருவாக்கும் திறன் வானொலிக்கு உள்ளது. 1930களின் முற்பகுதியில், அமெரிக்காவின் ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் இந்த திறனைப் பயன்படுத்தி, "ஃபயர்சைட் சாட்ஸ்(Fireside Chats)" என்ற நிகழ்ச்சியை வழங்கினார், இது மாலை நேர வானொலி நிகழ்ச்சியாக , 1933 முதல் 1944 வரை, ஒலிபரப்பு செய்யபட்டது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், வலையொலியின் வளர்ச்சி வானொலியின் நம்பமுடியாத குணங்களை அதிகபட்ச அளவிற்கு மறுபடியும் கொண்டு வந்து விட்டது.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. வலையொலியை மக்கள் வழக்கமாக தனிமையில் இருக்கும் போது கேட்கிறார்கள், பெரும்பாலும் காதொலிப்பான்[headphones] மூலம், இதனால் தொகுப்பாளர்கள் அவர்களுடன் நேரடியாக தங்கள் காதுகளில் பேச அனுமதிக்கிறது. இது தொகுப்பாளர்-கேட்பவர் இடையே பிணைப்பிற்கான சரியான சூழ்நிலையை அமைக்கிறது.
கேட்பவர்கள் நிகழ்ச்சிகளை மாற்றுவதை எதிர்த்து வானொலியின் வழங்குநர்கள் போராடுகிறார்கள், ஆனால் வலையொலியை கேட்பவர் இதனை கேட்க விரும்புகிறார் என்று நம்பலாம். இது வழங்குநர்களை உண்மையாக இருக்க அனுமதிக்கிறது. கேட்போர் சிலருக்கு ஒரு புதிய பிடித்த வலையொலியைக் கண்டுபிடிப்பது ஒரு புதிய நண்பரை உருவாக்குவது போன்றது. அமெரிக்க ஊடக நிறுவனமான ஆப்பிளின் ஐடியூன்ஸ், மிகப்பெரிய வலையொலி தளமாக 700,000 க்கும் மேற்பட்ட வலையொலிகளுடன் உறுவேடுத்துள்ளது - இது கேட்போருக்குப் பல நண்பர்களை உருவாக்கும் வாய்ப்பு.
வலையொலி ஒரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பாக 2004 இல் தொடங்கியது, பெரும்பாலும் வானொலி நிலையங்களால் தங்கள் நிகழ்ச்சிகளை மக்கள் எப்போதும் கேட்க பயன்படுத்தப்படுகிறது. கேட்பவர்களின் வசதிக்காக பதிவிறக்கம் செய்ய, அவற்றை இணையத்தில் வெளியிடப்படுகிறது. வலையொலி என்ற பெயர் அதைப் பிரதிபலித்தது. இதனை ஆங்கிலத்தில் "பாட்காஸ்ட்" என்பர். பிரிட்டிஷ் தொழில்நுட்ப பத்திரிகையாளரும் ஒளிபரப்பாளருமான பென் ஹேமர்ஸ்லி[Ben Hammersley] உருவாக்கியது, இது ஐபாட் (ஆப்பிள் உருவாக்கிய சிறிய சாதனம் ஒலி கோப்புகளை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும்) மற்றும் "பிராட்காஸ்ட்" (ஒளிபரப்பு) என்ற சொற்களின் கலவையாகும்.
குரலின் சக்தி
இரண்டு முன்னேற்றங்கள் - ஒன்று தொழில்நுட்பம், மற்றொன்று கலாச்சாரம் - வலையொலி சந்தையை உலகளாவிய தொழிலாக மாற்ற உதவியது. 2012 ஆம் ஆண்டில், 'ஆப்பிள்' நிறுவனம் தனது திறன்பேசியில் ஒரு வலையொலி பயன்பாட்டை உட்பொதித்தது, இது ஒரு நூலக அமைப்பை வழங்கியது, இது கேட்போரிடத்து பிரபலமானது. வலையொலி வடிவமைப்பில் லட்ச கணக்கானவர்களை அறிமுகப்படுத்தி ஒரு மிக பெரிய கலாச்சார மாற்றம் 2014 இல் நிகழ்ந்தது, நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன வானொலி குழு 'சீரியல்' [Serial] தொகுத்தபோது இந்த மாற்றம் நிகழ்ந்தது. 'சீரியல்' - ஒரு நிகழ்நிலை புலனாய்வு பத்திரிகையின் வலையொலி கதைகள்.
'சீரியலின்' முதல் தொகுப்பு ஒரு உண்மையான கதையை வழங்கியது, அது அதன் நேயர்களைக் கவர்ந்து, வாராந்திர வலையொலி வடிவமைப்பில் பிரபலமானது. 1999 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் தனது முன்னாள் காதலியும் உயர்நிலைப் பள்ளி வகுப்புத் தோழியுமான ஹே மின் லீ [Hae Min Lee] கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற அட்னான் சையத்தின்[Adnan Syed] கதையை இது கூறியது. 2000 ஆம் ஆண்டில் பால்டிமோர் கவுண்டி நடுவர் மன்றத்தால் சையத் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டது. 18 வயதாக அட்னான் சையது, தொடர்ந்து ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறான்.
ஆனால் வலையொலி தொகுப்பாளரான சாரா கோயினிக்[Sarah Koenig], இந்த நிகழ்ச்சிக்காக சிறைச்சாலை தொலைபேசியில் சையதை விரிவாக பேட்டி கண்டார், அவர் தண்டனை குறித்து சந்தேகம் எழுப்பினார். பன்னிரண்டு தொகுப்புகள் மேல், கோயினிக் சாட்சியங்கள் மூலம் ஒன்றிணைத்து, இந்த வழக்கோடு தொடர்புடைய பலரை நேர்காணல் செய்தார்.
வலையொலிகான முதல் 'பீபோடி'(Peabody) விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற கோயினிக் - குரலின் சக்தியை மேம்படுத்துவதற்கான ஒரு புதிய வழியை உலகத்திற்கு காட்டினார். வழக்கமான ஒலி ஊடக அடித்தளமாக இருந்தாலும், 'சீரியலின்' பாணி முன்பு வானொலியில் கேட்கப்பட்ட எதையும் போலல்லாது. முதலாவதாக, கேட்பவர்களிடம் அவர் சத்தியத்திற்கான தேடலில் தோழன் போல பேசினார், சமூக ஊடக வலைப்பின்னல்களில் உயிரோட்டமான விவாதங்களை உருவாக்கினார். 'சீரியல்' ஒரு உடனடி வெற்றியாக மாறியது, முதல் மாதத்தில் ஐம்பது லட்சம் பதிவிறக்கங்களைப் பெற்றது.
ஊடக நிறுவனங்கள் அதன் வெற்றியைப் பின்பற்ற முயன்றதால் சீரியலின் புகழ் வலையொலிகளுக்கான வளர்ச்சியைத் தூண்டியது. எண்ணற்ற உண்மையான குற்ற சம்பவங்கள் பற்றிய வலையொலிகள் தொடர்ந்து வந்தன. 'இன் தி டார்க்' போன்ற சிறந்த வலையொலிகள், வடிவமைக்கப்பட்ட கதைசொல்லலை வழங்கி பெரிதும் ஈர்க்கப்பட்டன., சில சமயங்களில் நீதியின் தோல்விகளை அம்பலப்படுத்தின.
பாப் கலாச்சாரம், அற்பத்தனம் மற்றும் செய்தி
அப்போதிருந்து, வலையொலியின் வகைகள் வளர்ந்து, பல வடிவங்களை எடுத்துக்கொண்டது. அரட்டையொலி (chatcast) வகை: இதில் தொகுப்பாளர் ஒரு கருப்பொருளில் குறுகிய, கூர்மையான கருத்துகளை வெளியிடுகிறார், அது பிரபலமாகியது. இதை போன்ற வலையொலிகளின் தயாரிப்பு செலவு குறைவு, இந்த வகை நிகழ்ச்சிக்கு நேயர்களிடம் பிரபலமான மற்றும் கேட்போரை ஈர்க்கும் ஒரு தனித்துவமான கருபொருள் கொண்ட ஒரு தொகுப்பாளர் தேவை. பெண்களுக்கான பிரத்தேகமான 'உங்கள் காதலியை அழைக்கவும்'( Call your girlfriend) போன்ற நிகழ்ச்சி வெகு தூரத்தில் இருக்கும் நண்பர்களுக்கான, வெளிப்படையான மற்றும் பெரும்பாலும் வேடிக்கையான அரட்டையொலி நிகழ்ச்சி ஆகும். மற்றும் 'நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பொருள்' (stuff you should know) என்கிற நிகழ்ச்சி,அதை நடத்தும் ஆண் தொகுப்பாளர்கள் அறிவியல் மற்றும் வரலாறு சம்பந்தப்பட்ட விஷயங்களை பொழுதுபோக்காக நேயர்களுக்கு கற்பிக்கும் அறிவு புர்வமான நிகழ்ச்சியாகும்.
ஒரு பொதுவான வடிவத்தில் பத்திரிகையாளர்கள் அந்த வாரத்தின் செய்திகளை தொகுத்து வழங்குகிறார்கள், ஆனால் வேண்டுமென்றே சாதாரண வழியில். அமெரிக்காவில் இணைய பத்திரிகையான ஸ்லேட்டின் ' (Slate) அரசியல் தர்பார்' (political gabfest) போன்ற நிகழ்ச்சிகளில் கேட்போர் தொகுப்பாளரின் நண்பர்கள் போல் உணரப்படுகிறார்கள். பிரான்சில், 'லு நோவெல் எஸ்பிரிட் பப்ளிக் ' (Le Nouvel Esprit Public) இதேபோன்ற அணுகுமுறையைக் கொண்டுள்ளது, ஆனால் அதன் விருந்தினர்கள் மூத்த அறிவுஜீவிகள். பத்திரிகையாளர் பிலிப் மேயரால் - அவரது வானொலி நிகழ்ச்சி நிறுத்தப்பட்ட பின்னர், இந்த வலையொலியை தொடங்கினார். ஐஸ் ஆன் கிலியட் ( Eyes on Gilead), பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'ஏ ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்'(A handmaid's Tale) பற்றிய ஆஸ்திரேலிய வலையொலி போன்ற பாப் கலாச்சார வலையொலிகள் பெருகிவிட்டன. நேர்காணல் நிகழ்ச்சிகளும் வலையொலி பதிவாக நன்றாக மாற்றப்பட்டன: மிகவும் பிரபலமான எடுத்துக்காட்டு 'தி ஜோ ரோகன் ஷோ' (The Joe Rogan Show), இதில் அமெரிக்க நகைச்சுவை நடிகர், பிரபலங்களை பேட்டி காண்கிறார்.
தன் வரம்பை நீட்டிக்க வலையொலி திறனை பத்திரிகைகள் விரைவாக கவனித்தன. 2017 ஆம் ஆண்டில், 'தி நியூயார்க் டைம்ஸ்'(The newyork times) - 'தி டெய்லி' (The Daily) ஐ அறிமுகப்படுத்தியது, இது ஒரு செய்தி நிகழ்ச்சி “செய்தி எவ்வாறு ஒலிக்க வேண்டும்” (How the News Should sound) என்று பெயரிடப்பட்டது. டைம்ஸ் அரசியல் பத்திரிகையாளர் மைக்கேல் பார்பரோ தொகுத்து வழங்கிய அதன் சூத்திரம் எளிது, அன்றைய ஒன்று அல்லது இரண்டு பெரிய செய்திகளை தேர்ந்தெடுத்து, செய்தித்தாளின் 1,300 பத்திரிகையாளர்களின் நிபுணத்துவத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. வலையொலி பாணி சாதாரணமானது மற்றும் தனிப்பயனாக்கப்பட்டது, பின்னணி இசையும் இணைக்கப்பட்டது. முடிவுகள் உடனடியாக இருந்தன: இளைஞர்கள் இலவச வலையொலிக்கு பரிந்துரைத்தனர். இரண்டு ஆண்டுகளில், 'டெய்லி' ஒரு நிகழ்ச்சிக்கு இருபது லட்சம் பதிவிறக்கங்களைப் பெறுகிறது. செப்டம்பர் 2019 இல், இது ஒரு புதிய மைல்கல்லை எட்டியது: ஒட்டுமொத்தமாக நூறு கோடி பதிவிறக்கங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவும் ஆங்கிலம் பேசும் உலகமும் வலையோலி சந்தையில் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், அது மாறும் என்று தெரிகிறது. மார்ச் 2019 இல், வோக்ஸ்நெஸ்ட் என்ற ஒலி தொழில்நுட்ப நிறுவனம், வலையொலி கேட்பவர்களில் மிக உயர்ந்த வளர்ச்சி லத்தீன் அமெரிக்காவில் - குறிப்பாக சிலி, அர்ஜென்டினா, பெரு மற்றும் மெக்சிகோவில் இருப்பதாக அறிவித்தது.
இது உலகின் மிகப் பெரிய ஸ்பானிஷ் மொழி கதை இதழியல் வலையொலியான 'ரேடியோ ஆம்புலண்டே(Radio Ambulante)'வின் வெற்றியை பிரதிபலிக்கிறது. அமெரிக்காவின் தேசிய பொது வானொலி(NPR - National Public Radio ) இல் இந்நிகழ்ச்சியின் ஆங்கில மொழி பதிப்பு ஒலிபரப்பப் படுகிறது.
இந்தியாவில், ஐவிஎம் வலையொலிகள் (IVM podcast) போன்ற நெட்வொர்க்குகள் வழியாக வலையொலிகள் வேகமாக விரிவடைகிறது. 'இந்தியா எக்ஸ்ப்ளெய்ன்ட்'( India Explained) வலையொலி "இந்தியாவைப் பற்றிய அனைத்தையும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் கூறப்படும்" என்று உறுதியளிக்கிறது, மேலும் இது மிகவும் பிரபலமானது. மத்திய கிழக்கில் சுமார் 400 வலையொலிகள் உள்ளன. ஜோர்டானின் அம்மானில் இருந்து ஒரு வலையொலி ஈப் (Eib - அரபு மொழியில் அவமானம்) சாதாரண மக்களின் வாழ்க்கையையும் சமூக, கலாச்சார மற்றும் மத தடைகளையும் ஆராய்கிறது.
சீனா வேறுபட்ட ஒலி-கேட்கும் மாதிரியைப் பின்பற்ற முனைகிறது, அங்கு மக்கள் கல்வி அறிவு திட்டங்களுக்கு ஒரு சாதாரண தொகையை செலுத்துகிறார்கள், அல்லது 'இமாலயா'(Himalaya) போன்ற ஊடாடும் ஒலி தளங்களைப் பின்பற்றுகிறார்கள், அதன் 60 கோடி பயனாளிகள் பாடல்களைப் பாடுவதற்கும் குடும்பத்தைப் பற்றி பேசுவதற்கும் அல்லது புத்தகங்களை பிறர் படிப்பதை ஒலியாகக் கேட்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். 'தி அமெரிக்கன் லைஃப்' (The American Life) போன்ற அமெரிக்க நிகழ்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு 'குஷி எஃப்எம்'(Gushi FM) பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த சாதாரண சீன மக்களால் சொல்லப்பட்ட கதைகளைக் கொண்டுள்ளது.
வலையொலி மக்களை சேர்க்கும் சக்திவாய்ந்த கருவியாக உறுவெடுத்தள்ளது. மக்களை ஈர்க்கக்கூடிய வலையொலியை உருவாக்க, ஒலி உற்பத்தியின் நுணுக்கங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் மற்றும் ஒலி ஒரு ஊடகமாக எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அறிவு கிடைத்தவுடன், கிட்டத்தட்ட எவரும் வலையொலியை உருவாக்க முடியும். இது ஓரங்கட்டப்பட்ட குரல்களை - அரசியல் அல்லது மத சிறுபான்மையினர், LGBQTI சமூகம், ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் பிறர் - கேட்க உதவுகிறது.
சமூக குழுக்கள், அரசு சாரா நிறுவனங்கள் (தன்னார்வு தொண்டு நிறுவனங்கள்), ஆர்வலர்கள் மற்றும் அனைத்து வகையான நிறுவனங்களும் இப்போது வலையொலிகளை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலியாவின் புற்றுநோய் கவுன்சில் வலையொலி தகவல் மற்றும் ஆதரவை வழங்குகிறது, மேலும் பல்கலைக்கழகங்கள் தங்கள் ஆராய்ச்சியை வலையொலிக்கள் வழியாக வெளிப்படுத்துகின்றன. "புதுமையான மற்றும் முன்னோடியான" என்று விவரிக்கப்பட்ட ஒரு முயற்சியில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவின் உச்ச நீதிமன்றம் 'கெர்டியின் சட்டம்' (Gertie's Law) மூலம் நீதி துறையை மிகவும் வெளிப்படையானதாக மாற்ற முயன்றது, இது ஒரு பிரபலமான வலையொலியாக ஒலிபரப்பப்பட்டது [இதற்காக ஆசிரியர் தயாரிப்பாளரைக் கலந்தாலோசித்தார்] இதில் நீதிபதிகள் அவர்களுடைய பணியை பற்றி விவாதிக்கிறார்கள் .
ஊடகங்களின் தவறான தகவல் மற்றும் அவநம்பிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள உலகில், வலையொலிகளின் நம்பகத்தன்மை தனித்துவமான வாய்ப்புகளை வழங்குகிறது - நீண்ட கால புலனாய்வு கதைசொல்லல் மற்றும் சமூக நீதியைப் பின்தொடர்வது, வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றை உருவாக்குவது வரை பயன்படுகிறது.
- சியோபன் மெக்ஹக் [Siobhan McHugh]
சியோபன் மெக்ஹக் ஒரு எழுத்தாளர், வாய்வழி வரலாற்றாசிரியர் மற்றும் வலையொலியாலர், அவர் ஆஸ்திரேலியாவின் வொல்லொங்காங் பல்கலைக்கழகத்தில் பத்திரிகை இணை பேராசிரியராக உள்ளார்.
மொழிபெயர்ப்பு
அஷோக் பாபு
பெங்களூருவில் வசிக்கும் மென்பொருள் பொறியாளர்.
THE UNESCO COURIER
Of all the journals published by the United Nations and its specialised institutions, The UNESCO Courier has always occupied first place for the number of its readers and the range of its audience, said the American journalist Sandy Koffler, the Courier's founder and first editor-in-chief, in 1988. This article is a translated version of the original article "Podcasts: Radio reinvented" by Siobhan McHugh.