சாட்போட் மற்றும் செயற்கை நுண்ணறிவின் புரட்சி

  • Bharani
  • ஆன்ட்ரஸ் பெட்ரேனோ
    தமிழில்: பரணிதரன் வெங்கடகிருஷ்ணன்

சாட்போட்ஸ் இதழின் 2019 அறிக்கையை பற்றி நான் இங்கு சுருக்கமாக பதிவிடுகிறேன். 80 சதவீதமான நிறுவனங்கள் சாட்போட்ஸை 2020ம் ஆண்டில் பயன்படுத்த கூடும். லாரன் ஃவோயே, 2022ம் ஆண்டு, வங்கிகள் சாட் போர்ட்ஸ் மூலம் வாடிக்கையாளர்கள் உடனான அவர்களின் தொடர்புகளில் 90% வரை தானியக்க முடியும் என்று உறுதிப்படுத்துகிறது. ஸ்பைஸ் வொர்க்ஸ், 2019ம் ஆண்டு 500க்கும் மேற்பட்ட மக்கள் பணியமர்த்தும் பெரிய நிறுவனங்களில் 40% நிறுவனங்கள் ஒன்று அல்லது பல ஸ்மார்ட் உதவியாளர்களை செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என்று உறுதியளிக்கிறது.

Chatbot

அனைத்து நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவை ஏதாவது ஒரு வடிவத்தில் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. AI எதிர்காலத்தின் உந்து சக்தியாக அமையும். செயற்கை நுண்ணறிவின் மிகமுக்கிய தொழில்நுட்ப வளர்ச்சியான சாட்போட்ஸ், நிறுவனங்களின் மிக முக்கிய விடயங்களாக கருதப்படுகின்ற, வாடிக்கையாளர் ஆட்சேர்ப்பு, பராமரிப்பு, கலந்துரையாடல், நேரடி விற்பனை மற்றும் இணையவழி விற்பனை, உள் தொடர்புகள் மற்றும் எண்ணிலடங்கா செயல்பாடுகளை தானியக்குவதன் மூலமாக நிறைய செலவுகளை தவிர்க்கலாம்.

இருப்பினும் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளை சாட்போட்ஸ் கொண்டு வரும் மகத்தான திறனை சில முறைகேடுகள் அதன் முக்கியத்துவத்தை பாதிக்கும். ஒரு சாட்போட் கொண்டிருக்கக்கடிய முக்கிய குணாதிசயத்தை நான் இங்கு முன்வைக்கிறேன்.

“சாட்போட்ஸ் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிகளில் ஒன்றாகும். இது நிறுவனத்தின் பல முக்கிய விடயங்களை வழி நடத்த மிகத் தெளிவாக உதவும் ”

  1. ஒரு உரையாடல் சாட்போட் (Conversational Chatbot) செயற்கை நுண்ணறிவு நிபந்தனைகள் அற்றதாக இருக்க வேண்டும். ஏற்கனவே உள்ள சில சாட்போட்ஸ் உரையாடல் இல்லாமல் குறைந்த திறன் கொண்டு இயக்கப்படுகின்றன. உதாரணமாக மைக்ரோசாஃப்ட் டே (Tay) எதிர்மறையான பதில்களால், வெளியிடப்பட்ட சில மணிகளில் திரும்பப் பெறப்பட்டது. சாட்போட்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டு திறம் படுத்தப்பட்டு நிறுவனங்களின் இலக்குகளை நோக்கி அமைய வேண்டும். தற்போது செயற்கை நுண்ணறிவின் உள்ள இயற்கை மொழி செயலாக்க வரம்புகளை (Natural Language Processing (NLP)) மனதில் கொண்டு ஒவ்வொரு சாட்போட்டுக்குமான தொழில்நுட்ப மற்றும் முறை அம்சங்களை கட்டமைக்க மிகக் கூடிய தொழில்முறை முயற்சி தேவைப்படுகிறது.

  2. தரம், பொருத்தமான பதில்கள். பயனர்கள் மிகவும் வெறுப்படைய கூடிய அம்சங்களில் ஒன்று அதிகூடிய தவறான பதில்களாகும். சரியாக வடிவமைக்கப்பட்ட மற்றும் பயிற்சி பெற்ற ஒரு சாட் போட் கேட்கப்பட்ட கேள்விகளில் குறைந்தபட்சம் 90% சரியான பதில்களை அளிக்கவேண்டும். சில தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமே இந்த இலக்கை அடைந்துள்ளன. சிறந்த நிபுணர்களால் மதிப்பிடப்பட்டு மற்றும் பயனர்களால் உறுதிப்படுத்தப்பட்ட பதில்களில் தரமே ஒரு வெற்றிகரமான சாட்போட்டிற்கு அடையாளம்.

  3. குறுகிய நேரத்தில் திறம்பட கற்பித்தல். ஒரு சாட் போட்டை வடிவமைக்கும் பொழுது நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான தத்துவார்த்த கேள்விகளை கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு நிறுவனத்திற்கு சாதகமான முடிவுகள், பயனர்களின் பயிற்சியை கருத்தில் கொள்ளவேண்டும்.

  4. சாட்போட்ஸ் பயனுள்ள செயல்களை செய்ய வேண்டும். தகவல்களை தெரிவிப்பதற்கு அப்பால் பயனர்களுக்கு எளிமையான மற்றும் எளிதான முறையில் பணிகளைச் செய்ய சாட்போட்ஸ் குரல் அல்லது எழுத்து மூலம் உதவ வேண்டும். உதாரணமாக உணவகங்கள் , விமானம், கடைகள், வைத்தியசாலை போன்ற இடங்களில்முன்பதிவு, வாங்குதல் மற்றும் சந்தா போன்ற நடவடிக்கைகள் அல்லது வங்கி மற்றும் பொது நிறுவனங்களில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுதல். எனவே அவற்றை கணினி ,CRM என்பவற்றில் ஒருங்கிணைத்து அனைத்து வகையான செயல்பாடுகளையும் பாதுகாப்பாக செய்ய முடியும்.

  5. தெரிநிலை மற்றும் ஒருங்கிணைப்பு. ஒரு சாட்போட் ஒரு நாளில் 24 மணி நேரமும் ஒரு வருடத்தில 365 நாட்களும் பதிலளிக்க கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதன் வடிவமைப்பு அனைத்து சேனல்கள் மூலமாக அணுகக் கூடியதாக ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். வலையமைப்பு, ஆப்ஸ், சமூக வலைத்தளங்கள், தொடர்பு கருவிகள் ( வாட்ஸ்அப், ஸ்லாக், டெலிக்ராம் போன்ற) , வீடுகளில், அணியக் கூடிய கருவிகள், போன்றவற்றை திறம்பட ஒருங்கிணைக்கப்பட வேண்டும். குறைந்த அளவு தொடர்பாடல் ஒருங்கிணைப்பு குறைபாடு காரணமாக இருக்கலாம்.

  6. தரவு மற்றும் தனிப்பயனாக்கம். ஒரு குறிப்பிட்ட பயனரின் தரவு சேவையை மேம்படுத்துவதற்காக இருக்க வேண்டும். பயனர்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்கேற்ப தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை வழங்க வேண்டும். இது மிக முக்கியமான நன்மையாகும். இந்த இலக்கு இல்லாத சாட்போட்ஸ் முதலீடு ஒரு வீணடிக்கப்பட்ட முதலீடாகும். செயற்கை நுண்ணறிவு, தனிநபர் தனிப்பயனாக்கம் மற்றும் ஈடுபாட்டில் பெரிய தரவுகளின் அடிப்படையில் ஒரு மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கும். ஏற்கனவே மேம்பட்ட நுட்பங்கள் மூலம் மிக அனுகூலமான முடிவுகள் பெறப்பட்டுள்ளன.

  7. ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட சாட்போட். அதன் வடிவமைப்பு, பயன்பாடு மற்றும் இலக்குகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவால் செயற்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் இன்னும் ஒரு வழிமுறையாக உள்ளது. சாட்போட் அதன் இலக்குகள் மற்றும் பணிகளுக்கு ஏற்ப கட்டாயமாக வடிவமைக்கப்பட வேண்டும். நான்கு வகையான சாட்போட்ஸ் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதை பொறுத்து அதற்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும். இணைய வழி சந்தைப்படுத்தல், தொடர்பாடல், வாடிக்கையாளர் ஆட்சேர்ப்பு அல்லது ஒரு அழைப்பு மையம் ஒவ்வொன்றிற்கும் வேறுபட்ட நோக்கங்கள் இருப்பதால் வேறுபட்ட தொழில்நுட்ப மற்றும் முறைமைகள் கையாளப்படவேண்டும். இல்லையெனில் முதலிடப்பட்ட பணம் வீண். 8. கணக்கீடு மற்றும் பகுப்பாய்வு. கணக்கீடும் பகுப்பாய்வும் மிகவும் அவசியமாகும். நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் தங்கள் பதில்களையும் தாக்கங்களையும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். நிறுவன தயாரிப்பு அனுபவமுள்ள ஊழியர்களுக்கும், தயாரிப்பு, சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் சேவை மற்றும் மனித வளங்கள் மற்றும் AI சிறப்பு அணிகள் என்பவற்றிற்கும் இடையேயான ஒருங்கிணைப்பு அவசியமாகும் . இது போன்ற virtual assistants வடிவமைப்பானது, பலதரப்பட்ட ஒழுக்கமான வேலையானது, அளவீடுகள் மற்றும் பகுப்பாய்வுகள் மூலம் இலகுவாக தீர்வுகளை கண்டறிந்து மற்றும் பயனர்களின் சாட்போட்ஸ் உடனான கருத்து பரிமாற்றங்களின் தரவுகளுக்கமைய மேற்கொள்ளப் படவேண்டிய மேம்பாடுகள் என்பவற்றை கண்டறிய வேண்டும். "சாட்போட்களில் AIஇன் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட வேண்டும், திறமையானதாக மற்றும் நிறுவனத்தின் இலக்குகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்"

  8. வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறைக் கோட்பாடுகள். எங்கள் வாடிக்கையாளர்கள் அல்லது ஊழியர்களின் நம்பிக்கையைப் பெற, நாம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும், மேலும் நல்ல நெறிமுறைக் கோட்பாடுகள் மற்றும் மதிப்புகளைப் பின்பற்ற வேண்டும். பயனர்களின் உரிமைகளை நெறிப்படுத்தப்பட்ட முறையில் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு சாட்போட்ஸ் மற்றும் AI ன் மிக முக்கியமான கடமையாகும்.

சந்தையில் தற்போது சில கருவிகள் திறமையாக, இந்த ஒன்பது தேவைகளை பூர்த்தி செய்கின்றன (குறைந்த செலவு மற்றும் மதிப்புகளை உருவாக்குதல்). தொழில்நுட்பமானது தயாரிப்பு, பிராண்ட் மற்றும் வாடிக்கையாளர்கள் (வாடிக்கையாளர்களுக்கு சாட்போட்ஸ் ) அல்லது மனித வளங்கள் (உள் தொடர்பு சாட்போட்ஸ் ) இவற்றின் கலவையாக இருக்க வேண்டும். இதில் தவறுகள் ஏற்படும் எனும் அபாயங்களை அறிந்தும் பல நிறுவனங்கள் AI முறைமையை பின்பற்றுகின்றன.

ஸ்பெயினில் முன்னெப்போதும் இல்லாத செயல்திறன் மற்றும் முடிவுகள் வழங்கக் கூடிய சாட்போட்ஸ் வடிவமைக்கப்படுகின்றன. ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ தற்போது ஸ்பானிஷ் தொழில்நுட்பத்தை இத்துறையில் வெற்றிக்கான ஒரு முன்மாதிரியாக கூறுகின்றது. 90 % க்கும் மேற்பட்ட சரியான பதில்களுடன் மற்றும் சந்தையில் மிகவும் மேம்பட்ட தளங்களைப் பயன்படுத்தி, அவர்கள் மேலே குறிப்பிட்ட குணங்களில் கவனம் செலுத்துகின்றனர். இது ஸ்பெயின் மற்றும் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களால் எடுக்கப்பட வேண்டிய ஒரு வாய்ப்பாகும்.

  • Technology
  • அறிவியல்
Bharani

மொழிபெயர்ப்பு

பரணிதரன் வெங்கடகிருஷ்ணன்

இலங்கையைச் சேர்ந்த பரணிதரன் வெங்கடகிருஷ்ணன், கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்று, கடந்த 6 வருடங்களாக புகழ்பெற்ற ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிகிறார்.

Uno Logo

UNO-MAGAZINE

UNO is an LLYC IDEAS publication created for clients, industry professionals, journalists and opinion leaders. This article is a translated version of the original article "The revolution of chatbots and artificial intelligence" by Andrés Pedreño.