தாஜ்மஹால் இந்தியாவின் ஒரே அல்லது அன்பின் முதல் நினைவுச்சின்னம் அல்ல !
உலகில் அன்பின் நினைவுச்சின்னமாகத் தாஜ்மஹால் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இன்னும் பல சின்னங்கள் இருந்தன - பதினேழாம் நூற்றாண்டில் ஷாஜகான் கட்டிய மும்தாஜ் மஹால் எனும் கல்லறைக்கு முன்னதாகவே பல நினைவுச் சின்னங்கள் இருந்தன. அவற்றில் இங்கே ஐந்து பட்டியிலடப்பட்டிருக்கின்றன.
அன்பின் நினைவுச்சின்னத்தைப் பற்றி நாம் யோசித்துப் பார்க்கும்போது, தாஜ்மஹால்தான் உடனடியாக நினைவுக்கு வருகிறது. ஏன் வரக்கூடாது? எல்லாவற்றிற்கும் மேலாக, பதினேழாம் நூற்றாண்டின் இந்த நினைவுச்சின்னம் இந்தியத் துணைக் கண்டத்தில் முகலாய கட்டிடக்கலை உச்சக்கட்டமாகக் காட்டப்படுகிறது, இது உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும். இது மிகவும் தகுதியான சின்னமாக இருக்கும்போது, பலருக்குத் தெரியாதது என்னவென்றால், இதேபோன்ற பல நினைவுச்சின்னங்கள் இந்தியாவில் உள்ளன, அவை ஒரு காதலியின் நினைவுச் சின்னங்களாகக் கட்டப்பட்டுள்ளன. அது கணவன் அல்லது மனைவியாக இருக்கலாம். தாஜ்மஹால்தான் முதலில் கட்டப்பட்டதாக பலர் நம்புகிறார்கள் உண்மையில், இந்த பிராந்தியத்தில் ஒரு பெண்ணுக்காகக் கட்டப்பட்ட முதல் கல்லறை தாஜ்மஹால் அன்று.
அத்தகைய ஐந்து அன்பின் நினைவுச்சின்னங்களை இங்கே பட்டியலிடுகிறோம், அவற்றில் நான்கு தாஜ்மஹாலுக்கு முந்தயவை. இந்த பட்டியல் எந்த வகையிலும் முழுமையானது அல்ல, ஆனால் குறைந்தபட்சம் ஒரு தொடக்கமாக இருக்கட்டும்.
படம். 1. பட்டக்கலில் உள்ள மல்லிகார்ஜுனா கோயில். (உபயம்: உதயாதித்ய காஷ்யப் / விக்கிமீடியா காமன்ஸ்)
விருபாக்க்ஷ மற்றும் மல்லிகார்ஜுனா கோயில்கள், பட்டக்கல், கர்நாடகா
கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விருபக்ஷ மற்றும் மல்லிகார்ஜுனா கோயில்கள்,இறந்த நபரை நினைவுகூறுவதற்காக கட்டப்படாத இந்த நினைவுச்சின்னங்கள் பட்டியலில் உள்ள இரு எடுத்துக்காட்டுகள், இவை போரில் பெற்ற வெற்றிகளை நினைவுகூறும் வகையில் கர்நாடகாவின் பட்டக்கலில் அருகாமையில் உள்ளன. விக்ரமாதித்யா II வின் சகோதரி ராணிகளான ஹைஹயா இளவரசிகளான லோகமஹாதேவி மற்றும் திரிலோக்யமஹாதேவி ஆகியோரால் 740 களில் காஞ்சிபுரத்தில் பல்லவர்கள் மீது விக்ரமாதித்யா II பெற்ற மூன்று முறை வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காகக் கட்டப்பட்டது. இதற்குச் சாட்சியமாக நதிக்கு அருகிலுள்ள விருபக்ஷா கோயிலின் கிழக்கு மண்டபத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது.
இந்த கோயில்கள் முதலில் லோகேஸ்வரா மற்றும் திரிலோகேஸ்வரா என்று அழைக்கப்பட்டன. பின்னர் அவை முறையே விருபக்ஷ மற்றும் மல்லிகார்ஜுனா என மாற்றப்பட்டன. இரண்டு சைவ கோயில்களும் ஒத்த வடிவங்களை கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் 18 பெரிய செவ்வக தூண்களைக் கொண்ட ஒரு பெரிய மண்டபத்தைக் கொண்டுள்ளது,புராண அத்தியாயங்கள் மற்றும் சமகால சமூக வாழ்க்கையின் காட்சிகள், மூன்று சிவாலயங்கள், மூன்று தாழ்வாரங்கள், பிரகாரங்கள் மற்றும் ஒரேமாதிரியான திராவிட அருமையான அமைப்புகள், சில மாற்றங்களுடன் குவிமாடங்களும் உள்ளன
தொழில்முறை கட்டிடக் கலைஞர் ஜார்ஜ் மைக்கேல் கருத்துப்படி, ‘எல்லா வகையிலும், மல்லிகார்ஜுனா மற்றும் விருபாக்க்ஷ கோயில்கள் அழகியல் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட விட்டங்கள் மற்றும் கூரை தகடுகள் ஆரம்பக்கால மேற்கு சாளுக்கியக் கலையின் வீச்சு மற்றும் உயிர்ச்சக்தியை மிக அற்புதமான முறையில் விளக்குகின்றன. இருப்பினும், காஞ்சியில் உள்ள ராஜசுமேஸ்வரர் கோயிலைப் பின்பற்றி எழுப்பப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பின்னர் எல்லோராவில் உள்ள பாறையிலிருந்து வெட்டப்பட்ட கைலாசா கோவிலுக்கு மாதிரியாக இருந்தது.
இரு கோயில்களிலும் உள்ள படிம உருவங்கள் நன்கு சிந்திக்கப்பட்டது, உதாரணமாக, சுவர்கள் மற்றும் தூண்களில் காம ஜோடிகளைச் சேர்ப்பது, அதே போல் விருபக்ஷா கோயிலின் நுழைவு மண்டபத்தில் உள்ள இரண்டு கொழுப்பு குள்ளர்களான பத்மநிதி மற்றும் சங்கநிதி ஆகியவற்றை நிலைநிறுத்தியது. இந்த தெய்வங்கள் பார்வையாளர்களுக்கும், கட்டுபவருக்கும் செழிப்பைக் கொடுக்கவல்லது.
படம். 2. பட்டானில் உள்ள ராணி கி வாவ், குஜராத் (உபயம்: கிரிட் மங்கோடி / சஹாபீடியா)
பட்டானில் உள்ள ராணி கி வாவ், குஜராத்
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான ராணி கி வாவ் உலகின் மிகவும் தனித்துவமான மற்றும் வித்தியாசமான படிகளை உடைய கிணறுகளில் ஒன்றாகும்.
பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம் உதயமதி மகாராணியால் அவரது கணவர் முதலாம் மன்னர் பீமாதேவாவின் நினைவாகக் கட்டப்பட்டது. அவர் மொதேராவில் பெரிய சூரிய -சிவன் கோவிலைக் கட்டியவர். குறிப்பாக இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், நீர்ப்பாசன இடங்களை நிர்மாணிப்பது சிறப்பானதாகக் கருதப்பட்டது, அதனால்தான் மேற்கு இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற படிநிலைகள் கட்டப்பட்டன.
தரிசு மற்றும் அம்சமற்ற நிலப்பரப்பில், அலங்கரிக்கப்பட்ட உட்புறங்களைக் கொண்ட இந்த நிலத்தடி கட்டமைப்புகள் பார்வையாளரின் மனதில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.நினைவுச் சின்னங்கள் அதைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கைக்குச் சிறப்பு சேர்க்கின்றன என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
குஜராத்தின் பட்டானில் சரஸ்வதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நினைவுச்சின்னம் உண்மையில்உள்ளூர் வாசிகளால் ‘ரன் கி வாவ்’ (ராணியின் படிக்கிணறு ) என்று அழைக்கப்படுகிறது. இது அதிகாரப்பூர்வ தொல்பொருள் ஆய்வுத் துறையின் பதிவுகளில்ஒரு ஆவணமாக்கும் போது ஏற்பட்ட தவறு, அங்கு ‘ரன்’ என்பதற்குப் பதிலாக ‘ராணி’என்று அழைக்கப்பட்டது, இது ‘ராணி கிவாவ்’ எனப் பிரபலமடைய வழிவகுத்தது.
ஏழு மாடி படிக்கிணறு நினைவுச்சின்னத்தின் மகத்துவத்தை மறுப்பதற்கில்லை வைஷ்ணவஅமைப்புகளின், சிற்பத்திறன் மற்றும் சிற்பிகளின் திறமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்கதாகும். தற்போதைய பாழடைந்த நிலையில், விஷ்ணு மற்றும் பார்வதியின் பெரியபடங்கள் சுமார் 400 ஆக உள்ளன, இது சரஸ்வதி நதியால் சுமார் 800 ஆண்டுகளாக வெள்ளத்தில் மூழ்கியதால் சேறும், சேறும் நிறைந்திருந்தது.
படம். 3. ஹுமாயூனின் கல்லறை, டெல்லி (உபயம்: சஹாபீடியா)
ஹுமாயூனின் கல்லறை, டெல்லி
டெல்லியின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஹுமாயூன் கல்லறை பதினேழாம் நூற்றாண்டின் சின்னமான தாஜ்மஹாலுக்கான வடிவமைப்பு வார்ப்புருவை வழங்கியதாகக் கூறப்படுகிறது, மேலும் இது தாஜ்மஹாலைக் கட்டியதிற்கு உத்வேகம் கொடுத்திருக்கக் கூடும். உண்மையில், பல முக்கிய கட்டடக்கலை கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் அதன் பங்கு 1993 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய குறிச்சொல்லைப் பெற்றது. இந்த நினைவுச்சின்னம் 1569 மற்றும் 1571 க்கு இடையில் ஹுமாயூனின் முதல் மனைவி பெகா பேகம் என்பவரால் கட்டப்பட்டது —அவர் ஹஜ் யாத்திரை செய்ததிலிருந்து ஹா ஜி பேகம் என்றும் அழைக்கப்படுகிறார் — அவர் இறந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு ஒரு இறுதி ஓய்வு இடமாககட்டப்பட்டது. இருப்பினும், சில வரலாற்றாசிரியர்கள் அந்த நேரத்தில் முகலாய வம்சத்தின் அரசியல் மற்றும் கலாச்சார வலிமையைக் குறிக்கும்வகையில் கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர்.
ஹுமாயூன் 1530 இல் அரியணையில் ஏறியபோது, அவரது முதல் மாமன் பிள்ளையான பெகா பேகம் வயது19 தான். ஹுமாயூன் பெர்சியாவில் நாடுகடத்தப்பட்டபோது பெகா பேகம் அவருடன் இருந்தார், தனிப்பட்ட முறையில் அபாயங்களையும் எதிர் கொண்டார். 1539 ஆம் ஆண்டில், ஒரு பயணத்தின் போது, பெகா பேகம் ஷெர் ஷா சூரியால் கைதியாக எடுத்துக் கொள்ளப்பட்டார் — இத்தாலிய எழுத்தாளர்-பயணி நிக்கோலாவ் மனுசி கருத்துப்படி, சிறைபிடிக்கப்பட்ட ஒரே முகலாய பேரரசி. இதையறிந்த ஹுமாயூன் தனது தலைமை மனைவியை மீட்க விரைந்தார்.ஹுமாயூன் 1556 இல் இறந்தபோது மிகுந்த வேதனையடைந்தார், பின்னர் இந்த அற்புதமான கல்லறை கட்டுமானத்தை மேற்பார்வையிடுவதில் அதிக நேரம் செலவிட்டார்.
இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள தோட்ட-கல்லறை பாணியிலான கட்டிடக்கலைக்கு முதல் முக்கிய எடுத்துக்காட்டுகளில் ஒன்று.மற்றும் சிவப்பு மணற்கற்களை இவ்வளவு விரிவாகப் பயன்படுத்தியதும் முதல் முறையாகும். கட்டடக்கலை பாணி முக்கியமாக முகலாயமாக இருந்தாலும், இந்திய வடிவமைப்பின் அம்சங்கள்-குறிப்பாக ராஜஸ்தானி தாக்கங்கள்-அவை சத்திரிகளிலும் , பலகணி மாடங்களிலும், அடைப்புக்குறிப்புகள் போன்றவற்றில் காணப்படுகின்றன. 1582 ஆம் ஆண்டில் அவரது மரணத்திற்குப் பிறகு பெகா பேகம் மேலும் 160 குடும்பஉறுப்பினர்கள் மற்றும் முகலாய பிரமுகர்களுடன் இங்கு அடக்கம் செய்யப்பட்டார், இது"முகலாயர்களின் தங்குமிடம்" என்று குறிப்பிடுவதை நியாயப்படுத்தியது.
படம். 4. அப்துர் ரஹீம் கான்-இ-கானாவின் கல்லறை, டெல்லி (உபயம்: ரஸ் பவுலிங் / விக்கிமீடியா காமன்ஸ்)
அப்துர் ரஹீம் கான்-இ-கானாவின் கல்லறை, டெல்லி
தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, அப்துர் ரஹீம்கான்-இ-கானா 1598 இல் தனது மனைவி மஹ் பானுவுக்கு ஒரு கல்லறையைக் கட்டினார். இந்த பிராந்தியத்தில் ஒரு பெண்ணுக்காகக் கட்டப்பட்ட முதல் கல்லறை இது என்று கூறப்படுகிறது.ரஹீம் அல்லது ரஹீம் தாஸ் என்று பிரபலமாக அறியப்பட்ட அவர் அக்பரின் நீதிமன்றத்தில் ஒரு பிரபலமான கவிஞர், ஒரு திவான், தளபதி மற்றும் நவரத்தினங்களில் ஒருவர். துரதிர்ஷ்டவசமாக, மஹ் பானுவைப் பற்றி அதிகம் தெரியவில்லை, அவர் ஜிஜி அங்காவின் மகள், அக்பரின் வளர்ப்புத் தாய் மற்றும் தாதி மற்றும் மிர்சா அஜீஸ் கோகாவின் சகோதரி.
பக்தி இயக்கத்தின் போது கிருஷ்ணர் மீது கவிதைகள் இயற்றிய ரஹீம், பின்னர் 1627 இல் அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார், எனவே, இது மஹ் பானுவின் கல்லறை என்று அழைக்கப்படாமல் அப்துர் ரஹீம் கான்-இ-கானாவின் கல்லறை என்று அழைக்கப்படுகிறது இந்த வடிவமைப்பு இஸ்லாமிய மற்றும் இந்து கட்டிடக்கலைகளின் கலவையாகும், இது ஸ்வஸ்திகா மற்றும் மயில்கள் போன்ற சில இந்து வடிவங்களுடன் உள்ளது. இந்த அமைப்பு, ஹுமாயூனின் கல்லறையுடன், தாஜ் கட்டுமானத்திற்கு ஊக்கமளித்ததாகக் கூறப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சஃப்தர்ஜங் கல்லறையை உருவாக்க இங்கிருந்து பளிங்கு மற்றும் மணற்கல் பயன்படுத்தப்பட்டதாக பலர் கூறுகின்றனர், ஆனால் இது பாதுகாப்பு கட்டிடக் கலைஞர்கள் மற்றும் பிற்பகுதியில் வரலாற்றாசிரியர்களால் மறுக்கப்பட்டது.
படம். 5. அவுரங்காபாத்தில் உள்ள பிபி கா மக்பரா (Courtesy: Sanjay Acharya/Wikimedia Commons)
அவுரங்காபாத்தில் உள்ள பிபி கா மக்பரா
டெக்கான் தாஜ் என்று அழைக்கப்படும் இந்த அழகிய வெள்ளை பளிங்கு நினைவுச்சின்னத்தைத் தென்னிந்தியாவில் கட்டியது யார் என்பதில் சில சர்ச்சைகள் உள்ளன. அவுரங்கசீப்பின் முதல் மனைவி தில்ராஸ் பானு பேகத்தின் நினைவாகக் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னத்தின் முன்னால் உள்ள அதிகாரப்பூர்வ ஏ.எஸ்.ஐ வாரிய குறிப்பு இந்த கட்டுமானத்தை அவர்களின் மகன் ஆசாம்கான் கட்டியதாகக் குறிப்பிடுகிறது. இருப்பினும், எழுத்தாளர் ரபாத் குரேஷி போன்ற சிலர் மட்டும் வெளிநாட்டுப் பயணி ஜீன் பாப்டிஸ்ட் டேவர்னியரின் கண்டுபிடிப்புகளின்படி, 1653 ஆம் ஆண்டில் மக்பராவின் கட்டுமானம் தொடங்கப்பட்டு 1660 இல் நிறைவடைந்தது, நான்கு வயது ஆசாம் தனது தாய்க்குக் கல்லறையை ஆணையிடுவது மிகவும் சாத்தியமில்லை. ஆனால், முகமது ஆசாம் 1680 ஆம் ஆண்டில் டெக்கான் ஆளுநராக இருந்தார், அவர் மக்பாராவின் தீவிரமான சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டபோது, இந்த அனுமானத்திற்கு வழிவகுத்திருக்கக்கூடும்.
தாஜ்மஹால் மாதிரியாகவும், அதைவிடக் குறைந்த பொருட்செலவிலும் உருவாக்கப்பட்டது. மொசைக், இன்லே, கிளாஸ் மொசைக், பொறிக்கப்பட்ட பளிங்குத் திரைகள் மற்றும் பியட்ரா துரா போன்ற ஆடம்பர பொருட்கள் புறக்கணிக்கப்பட்டு , ஸ்டக்கோ பெயிண்டிங், அலங்காரத்துடன் கூடிய ஸ்டக்கோ பிளாஸ்டர், ஸ்டக்கோ லஸ்ட்ரோ மற்றும் டாடோ போன்ற எளிமையான பொருட்கள் உபயோகப் படுத்தப்பட்டன.
அநேகமாக முகலாய பாணியில் கட்டப்பட்ட டெக்கானில் மிகச்சிறந்த முஸ்லீம் கல்லறை, அவுரங்கசீப்பின் பிரியத்தின் சான்றாக பிபி கா மக்பரா பாராட்டப்படுகிறார் , பிரபலமாக ரபியா த ராணி என்று அழைக்கப்படுகிறார். இந்த பெயர் முஸ்லீம் பெண் துறவி ரபியாவை நினைவூட்டுகிறது.இப்போது கூட சன்னதிக்குச் சென்று பெண்கள் சன்னதியில் கட்டப்பட்ட வளையல்களை விட்டு விடுகிறார்கள்,பின்னர் அவர்களின் விருப்பம் நிறைவேறும் போது இனிப்புகள் வழங்குகிறார்கள். 1657 ஆம் ஆண்டில் அவர் இறந்த பிறகு, சமைத்த உணவு ஏழைகளுக்குப் பெரிய அளவில் விநியோகிக்கப்பட்டதாகவும், அவை பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் (பித்தளைகளால் ஆனவை மற்றும் கில்டட் செய்யப்பட்டவை) அவற்றில் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன, பட்டுத் தொங்கு சீலைகள், வெல்வெட் திரைச்சீலைகள், தரைவிரிப்புகள் மற்றும் கல்லறையில் பயன்படுத்தப்படும் மற்றும் பல்வேறு பொருள்கள் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மசூதியின் முற்பகுதியில் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.
மொழிபெயர்ப்பு
வாணி பத்மநாபன்
ஆங்கிலத்திலிருந்து இந்திய மொழிகளுக்கு ஆர்வமுள்ள பன்மொழி மொழிபெயர்ப்பாளர். சிறுவயதிலிருந்தே மொழியியல். ஆவணங்கள் முதல் முழு வலைத்தளங்கள் வரை பல திட்டங்களை வெற்றிகரமாக மொழிபெயர்த்துள்ளார்.
SAHAPEDIA
Sahapedia is an open encyclopedic resource on the arts, cultures and histories of India. This article is a translated version of the original article "Taj Mahal is neither India’s only nor first monument of love, here are five others" by Shruti Chakraborty.